×
Saravana Stores

5 ராணுவ வீரர்கள் வீரமரணம்: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்

ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீர் கதுவாவில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும், கடினமாக சூழலில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தேசம் துணை நிற்கும் என்றும், பயங்கரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்றும் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

 

The post 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Union Defense Minister ,Rajnath Singh ,Jammu ,Kashmir ,Kathua, Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு நீதிமன்றத்தில் குண்டு வீச்சு