- புதுக்கோட்டை கவி நாடு கண்மாய்
- புதுக்கோட்டை
- கலெக்டர்
- மெர்சி ரம்யா
- புதுக்கோட்டை கவினாடு
- புதுக்கோட்டை மாவட்டம்
- காவிநாடு கன்மாய்
புதுக்கோட்டை, ஜூலை 9: புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கவிநாடு கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, நன்மை தரும் மரங்களை நடும் பணியின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் மாவட்டம் தோறும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி நன்மை தரும் மரங்களை நடவு செய்திட அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவிநாடு கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி நன்மை தரும் மரங்களை நடும் பணியின் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், கவிநாடு கண்மாய் குளக்கரைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள், முட்புதற்கள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டுவரும் பணியினையும், நன்மை பயக்கும் மரங்கள் நடவு செய்யப்பட்டுவரும் பணியினையும், குளக்கரைகள் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இப்பணிகள் அனைத்தையும் தொடர்புடைய அலுவலர்கள் விரைவாக முடித்து, கண்மாயிற்கு வந்தடையும் நீர் முழுவதையும் சேமித்து நிலத்தடி நீர்மட்டதை உயிர்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே கவிநாடு கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அகற்றிட தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், புதுக்கோட்டை ஆர்டிஓ ஐஸ்வர்யா, செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) கனிமொழி, உதவி செயற்பொறியாளர் (பொ.ப.து.) லதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் கருவேல மரங்கள் அகற்ற அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் appeared first on Dinakaran.