- முதல் அமைச்சர்
- திட்ட முகாம்
- நாகப்பட்டினம்
- Tirumarukal
- கிளிவேலூர் ஊராட்சி ஒன்றியங்கள்
- கலெக்டர்
- ஜனிதம் வர்கீஸ்
- கிளிவலேலூர்
- பஞ்சாயத்து யூனியன்
- தின மலர்
நாகப்பட்டினம்,ஜூலை9: நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 11ம் தேதி நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார்.முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்டம் தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் வரும் 11ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 10ம் தேதி வரை ஊரகப் பகுதிகளில் நடத்தப்பட உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 11ம் தேதி நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்கடம்பனூர், ஆழியூர். தேமங்கலம், சங்கமங்கலம் ஆகிய 5 ஊராட்சிகளை இணைத்து ஆழியூர் அரசு மேல்நிலை பள்ளியிலும், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், குத்தாலம், கோபுரராஜபுரம் ஆகிய 5 ஊராட்சிகளை இணைத்து நரிமணம் அரசு உயர்நிலை பள்ளியிலும், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவூர், காக்கழனி ஆகிய இரண்டு ஊராட்சிகளை இணைத்து தேவூர் திருமலை திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் எரிசக்தி துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகள் மூலம் வழங்கப்பட உள்ள சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
The post நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.