×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர் காப்பீடு செய்யலாம் செம்பனார்கோயில் பகுதியில் அறுவடைக்கு தயாராகும் குறுவை நெல்

செம்பனார்கோயில், ஜூலை 9: செம்பனார்கோயில் பகுதியில் அறுவடைக்கு குறுவை நெற்பயில் தயாராக உள்ளது. அரசு உரிய விலைக்கு கொள்முதல் செய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறுவை நெல் சாகுபடி செய்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து குறுவை நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு சில பகுதிகளில் சாகுபடிக்கு வயலை பக்குவப்படுத்தும் பணியும், நடவு பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செம்பனார்கோயில் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் முன்பே நடவு செய்யப்பட்டதால் தற்போது நெற்கதிர்கள் முளைத்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதுகுறித்து குறுவை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் கூறுகையில், குறுவை சாகுபடி என்பது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் நடவு செய்து 110 முதல் 125 நாட்களுக்குள் அறுவடை செய்வார்கள். அந்த வகையில் ஏப்ரல் மாத இறுதியில் குறுவை பணியை மேற்கொண்டோம். சில பகுதிகளில் விவசாயிகள் தற்போது தான் நடவு செய்து வருகின்றனர். மழைக்கு முன்பு குறுவை அறுவடையை முடித்துவிட்டு சம்பா பணியை தொடங்க வேண்டும். தற்போது நெற்பயிர்களில் கதிர்கள் முளைத்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் குறுவை நெல்லை அறுவடை செய்வோம். குறுவை நெல்லை அரசு உரிய விலைக்கு கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்த்து உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர் காப்பீடு செய்யலாம் செம்பனார்கோயில் பகுதியில் அறுவடைக்கு தயாராகும் குறுவை நெல் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Sembanarcoil ,Mayiladuthurai District ,Arupadi ,Parasalur ,Memathur ,Kalakastinathapuram ,Madappuram ,Akur ,Mudikandanallur ,Melapadi ,Thiruchampalli ,Sembanarkoil ,Dinakaran ,
× RELATED சாலைகளில் சுற்றி திரியும் மனநலம்...