×

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி

வேலூர், ஜூலை 9: வேலூரில் ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடியால் விரக்தியடைந்த அந்நிறுவன ஏஜென்ட் விரக்தியடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் சத்துவாச்சாரி பகுதி-3 டபுள்ரோட்டை சேர்ந்தவர் எஸ்.முகிலன்(47). இவர் அமேசான் பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்டாகவும் இருந்து வந்தார். அப்போது சத்துவாச்சாரி, ரங்காபுரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் இருந்து ஐஎப்எஸ் நிதி நிறுவனத்துக்கு டெபாசிட்டாக பணம் பெற்றாராம்.

இந்நிலையில் மோசடியில் சிக்கிய நிதி நிறுவனம் மூடப்பட்டது. அந்நிறுவனம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் இவர் மூலம் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் முகிலனிடம் பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வந்தததாக தெரிகிறது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு அவர் தலைமறைவானார். இந்த நிலையில் குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். இதையறிந்த முதலீட்டாளர்கள் மீண்டும் போன் மூலம் தொடர்பு கொண்டு, தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்டநேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது முகிலன் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்துள்ளார். இதனால் அவரது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த சத்துவாச்சாரி போலீசார் முகிலன் சடலத்தை கைப்பற்றி அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி appeared first on Dinakaran.

Tags : IFS ,Vellore ,S. Mughilan ,Vellore Sathuvachari Area ,3 Double Road ,Amazon ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்