- கல்வி
- குடியாதம்
- கேஎம்ஜி கலைக் கல்லூரி
- வேலூர்
- கலெக்டர்
- சுப்புலட்சுமி
- குடியாத்தம் கேஎம்ஜி கலைக் கல்லூரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சிறப்பு கல்வி கடன் மேளா கலெக்டர் தகவல்
வேலூர், செப்.6: குடியாத்தம் கே.எம்.ஜி கலைக்கல்லூரியில் சிறப்பு கல்விக்கடன் மேளா இன்று நடக்க உள்ளதாக கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள். 10ம் வகுப்பு மற்றும் பிஸ்2 வகுப்பு முடித்து மேற்படிப்பு தொடரமுடியாமல் உள்ள மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் இருந்து வரும் நடைமுறை சிக்கல்களை களைந்து கல்விக்கடன் பெறுவதில் கல்விக்கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து வங்கி அலுவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக்கடன் முகாம் கடன் மேளா நடத்தவுள்ளது.
அத்னபடி முதல் கட்டமாக வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவ மற்றும் மருத்துவம் சார்நத கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், சட்ட கல்லூரி, கல்வியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்குபெறும் சிறப்பு கல்வி கடன் வழங்கும் மேளா இன்று 6ம் தேதி குடியாத்தம் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மேற்படி முகாமில் இ- சேவை மையம் அமைக்கப்படவுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல். பான் கார்டு, ஆதார் கார்டு, சாதி, வருமானம், முதல்பட்டதாரி சான்றிதழ், கல்லூரியில் தற்போது படிக்கும் சான்றிதழ் மற்றும் கல்விக்கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் இந்த சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாமினை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
The post இன்று சிறப்பு கல்விக்கடன் மேளா கலெக்டர் தகவல் குடியாத்தம் கே.எம்.ஜி கலைக்கல்லூரியில் appeared first on Dinakaran.