விருதுநகர், ஜூலை 9: விருதுநகர் அருகே மாதச் சீட்டு நடத்தி, பணம் வசூலித்து திருப்பித் தராமல் தலைமறைவானவர்களை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என ஏமாந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடுவப்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரத்தில் இயங்கி வந்த நிதி நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் மாதச் சீட்டு பணம் கட்டி வருகிறோம்.
முடிவடைந்த சீட்டுக்களுக்கும் பணம் கொடுக்கவில்லை. கடந்த 2 மாதங்களாக அலுவலகம் மூடி கிடக்கிறது. நிறுவனத்தை நடத்தியவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பணம் வசூலித்து மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post விருதுநகர் அருகே மாதச்சீட்டு நடத்தி மோசடி: தனியார் நிதி நிறுவனம் மீது புகார் appeared first on Dinakaran.