- ஈரோடு
- சரணா
- சரனியா
- கோபி?. திருக்குறள்
- கோபி
- Satti
- நம்பியூர்
- தமிழர் பாளையம்
- பவானி சாகர்
- தாளவாடி ஒன்றிய அரசு உயர்
- மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்
- மெட்ரிக்
- சி.பி.எஸ்.சி.
- தின மலர்
ஈரோடு,ஜூலை9:சாரண, சாரணிய ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் கோபியில் நேற்று நடைபெற்றது. கோபி, சத்தி, நம்பியூர், டிஎன் பாளையம், பவானிசாகர், தாளவாடி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த அரசு உயர்நிலை,மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகளை சேர்ந்த சாரண, சாரணிய இயக்கத்தை சார்ந்த ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சாரண,சாரணிய இயக்க ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதே போல ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு எமிஸ் சார்ந்த 2 நாள் பயிற்சி முகாம் நேற்று பெருந்துறையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
The post சாரண ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி appeared first on Dinakaran.

