×

ஜாபர்சாதிக் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்

சென்னை: ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர்சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர். தற்போது டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர்சாதிக் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், போதைப் பொருள் கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தன் மீது தவறான உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திஹார் சிறையில் உள்ள தன்னை அமலாக்க துறை வழக்கில் கைது செய்வது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாரண்ட் பெற்றுள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், கைதுக்கு எதிராக ஜாபர்சாதிக் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அது குறித்து வாதங்களை முன்வகை அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post ஜாபர்சாதிக் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம் appeared first on Dinakaran.

Tags : Zabarzadiq ,Enforcement ,ICourt ,Chennai ,Central Anti-Narcotics Unit ,Jafarsadhik ,Australia ,Delhi Tihar Jail ,Zafarsadiq ,Enforcement department ,
× RELATED அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்...