×

கள்ளச்சாராயம், பதுக்கல் மது விற்பனை ஒழித்தல் ஆய்வுக்கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் கள்ளத்தனமாக மது விற்பதை தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமான மது விற்பனையை ஒழித்தல், அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், பொன்னேரி சப் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாஹே முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், கள் விற்பனை செய்தல், மதுபானங்கள் விதிமீறி விற்பனை செய்தல், அண்டை மாநில மதுபானங்கள் விற்பனை செய்தல், அண்டை மாநில மதுபானங்கள் விற்பனை செய்தல், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற தடுத்தல் குறித்து வாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், கோட்ட அளவில் வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடத்த வேண்டும். கூட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பொன்னேரி சப் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாஹே, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், கலால் உதவி ஆணையர் ரங்கராஜன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரேணுகா, போலீஸ் டிஎஸ்பி க்கள் அனுமந்தன், அழகேசன், கலெக்டர் அலுவலக மேலாளர் செல்வம், வட்டாட்சியர்கள் பூந்தமல்லி கோவிந்தராஜ், திருவள்ளூர் வாசுதேவன், ஊத்துக்கோட்டை மதன், ஆர்.கே. பேட்டை விஜயகுமார், பள்ளிப்பட்டு சிவக்குமார், பொன்னேரி மதி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கள்ளச்சாராயம், பதுக்கல் மது விற்பனை ஒழித்தல் ஆய்வுக்கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : of ,and Hoarding ,Tiruvallur ,Tiruvallur district ,Tiruvallur District Collector's Office ,
× RELATED மணலி புதுநகர் அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு..!!