×
Saravana Stores

சாலையில் ரகளை; வாலிபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மணவாளநகர் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது போலீசார் மணவாளநகர் சந்திப்பு பகுதி அருகே சென்றபோது அங்கு மணவாளநகர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்கி (19), தான் ரவுடி என்று கூறி சாலையில் நின்று கொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். இதை கண்ட போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர்.

The post சாலையில் ரகளை; வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thiruvallur ,Manavalanagar ,Murugavel ,Vignesh ,Manavalanagar MGR Nagar ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...