×
Saravana Stores

பங்காரு அடிகளார் இல்ல திருமணம் மணமக்களுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் வாழ்த்து

மதுராந்தகம்: திமுக கட்சி இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்று மணமக்கள் அகத்தியன்- ஷாலினி ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார், ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாரின் பேரனும் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன்-ஆஷா அன்பழகன் ஆகியோரின் இளைய மகன் அகத்தியன், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சதீஷ் நாராயணன் – விஜயலட்சுமி ஆகியோரின் மகள் ஷாலினி ஆகியோரின் திருமண நிகழ்ச்சி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அருகில் கோலாகலமாக நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், ஆன்மீக மடாதிபதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் திமுக கட்சி இளைஞரணிச் செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை மணமக்களை வாழ்த்த பங்காரு அடிகளாரின் இல்லத்திற்கு சென்றார். அப்போது ஆன்மிக இயக்க துணைத் தலைவர் கோ.ப.அன்பழகன் மலர் கொத்து கொடுத்து அவரை வரவேற்றார்.

இதனையடுத்து மணமக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post பங்காரு அடிகளார் இல்ல திருமணம் மணமக்களுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Bangaru Adikalar ,Madhurantagam ,DMK Party ,Youth Secretary ,Udhayanidhi Stalin ,Bangaru Adigalar ,Agathiyan-Shalini ,Melmaruvathur Adiparashakti Siddhar Peetha ,Udhayanidhi ,
× RELATED எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி...