- ராகுல்
- காங்கிரஸ்
- புது தில்லி
- ராகுல் காந்தி
- மணிப்பூர்
- வெடித்தபோது
- மோடி
- மாஸ்கோ
- பொதுச்செயலர்
- ஜெய்ராம் ரமேஷ்
- மோடி மணிப்பூர்
- தின மலர்
புதுடெல்லி: கடந்த ஆண்டு மே மாதம் வன்முறை வெடித்ததில் இருந்து 3வது முறையாக மணிப்பூருக்கு ராகுல் காந்தி சென்றிருக்கும் நிலையில், பிரதமர் மோடி ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ளார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு சென்றுள்ளார். அதே சமயம், உயிரியல் மூலமாக பிறக்காதவரான பிரதமர் மோடி மாஸ்கோவுக்கு சென்றுள்ளார்.
இனி மோடியின் தம்பட்ட கோஷ்டியினர், அவர் ரஷ்யா, உக்ரைன் போரை தற்காலிகமாக நிறுத்திவிட்டார் என்பார்கள். இன்னும் வினோதமான பல கதைகளை அள்ளிவிடுவார்கள். கடந்த 2023ம் ஆண்டு மே 3ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்து 14 மாதங்கள் ஆன நிலையில், அங்கு 3வது முறையாக ராகுல் காந்தி சென்றுள்ளார். ஆனால் பிரதமர் மோடிக்கு மணிப்பூருக்கு செல்ல நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை. அந்த மாநிலத்தின் முதல்வர் சொந்த கட்சியை சேர்ந்தவராக இருந்த போதிலும், அவரையோ, மாநிலத்தின் பிற அரசியல் தலைவர்களையோ, எம்எல்ஏ, எம்பிக்களையோ மோடி சந்திக்கக் கூட இல்லை’’ என்றார்.
The post மாஸ்கோவில் மோடி மணிப்பூரில் ராகுல்: காங்கிரஸ் தாக்கு appeared first on Dinakaran.