- அமெரிக்காவில் வெப்ப அலை
- லாஸ் ஏஞ்சல்ஸ்
- கலிபோர்னியா, அமெரிக்கா
- கலிபோர்னியா
- ஐக்கிய மாநிலங்கள்
- வடக்கு கலிபோர்
- அமெரிக்காவில்
லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீடித்து வரும் வெப்ப அலைக்கு ஒருவர் பலியானார். இன்னொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்பம் காரணமாக,வடக்கு கலிபோர்னியாவில் காட்டு தீ பரவி வருகிறது. காட்டு தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையே, கிழக்கு கலிபோர்னியாவில் உள்ள டெத் வேலி நேஷனல் பார்க் பகுதிக்கு 6 இளைஞர்கள் கொண்ட குழு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
கடும் வெயில் நேரத்தில் இளைஞர்கள் சென்றுள்ளனர். இதில் வெப்ப அலையில் சிக்கி ஒரு இளைஞர் பலியானார். இன்னொருவர் லாஸ்வேகாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மீதி உள்ள 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று நேஷனல் பார்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு கலிபோர்னியாவில் 43.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கிழக்கு கலிபோர்னியாவின் டெத் வேலி நேஷனல் பார்க்கில் அதிகபட்சமாக 53.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
The post அமெரிக்காவில் வெப்ப அலை:ஒருவர் பலி appeared first on Dinakaran.