×

நீட் தேர்வு வினாத்தாள் கசித்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு: உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான 36 வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மே மாதம் நடந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மே 5ஆம் தேதி 4,750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். இந்த தேர்வு மொத்தமாக 13 மொழிகளில் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. நீட் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நடந்தன. ஆனால் தேசிய தேர்வு முகமை குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தது. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

ஒரே நேரத்தில் 38 மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில், 34 மனுக்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலமாகவும், 4 மனுக்கள் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மூலமாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட மறுதேர்வுகளுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே முறைகேடு நடந்ததாக தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்து வந்தது. விசாரணையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது. விசாரணையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது. சிபிஐ விசாரணைக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? நீட் வினாத்தாள் கசிவின் தாக்கம் எப்படி என்பதே தற்போதைய கேள்வி. வெளிநாடுகளுக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அந்த கேள்விக்கு தூதரகங்கள் மூலம் நீட் வினாத்தாள் அனுப்பி வைக்கப்படுவதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை முழுவதுமாக ரத்து செய்யவேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீட்தேர்வில் இந்த ஆண்டு அதிகம் பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். நீட் வினாத்தாளை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுத்து மனப்பாடம் செய்ய வைத்ததற்கான வீடியோ இருப்பதாக மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் வாதம் செய்துள்ளனர்.

ஒரே ஒரு இடத்தில் மட்டும் நீட் வினாத்தாள் கசிந்ததாகவும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தரப்பில் வாதம் செய்துள்ளனர்.

பிப்.9-ல் நீட் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. தேர்வு முடிவு ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் ஜூன் 4-ல் வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் நீட் வினாத்தாள் வெளியாகி உள்ளதால் பல இடங்களில் பரவியுள்ளது. பெருமளவில் நீட் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மே 4-ம் தேதியே நீட் வினாத்தாள் மற்றும் அதற்கான விடைகள் வெளியானதாக வழக்கறிஞர் ஹூடா வாதம் செய்து வருகிறார்.

தேர்வு வினாத்தாள் எஸ்.பி.ஐ.யில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. மாற்று ஏற்பாட்டுக்கான வினாத்தாள் கனரா வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது என்று தேர்வு முகமை கூறியுள்ளது. 4-ம் தேதி வினாத்தாள் வெளியானதை அடுத்து கனரா வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட வினாத்தாள் பயன்படுத்தப்பட்டது. நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

டெலிகிராம், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் வினாத்தாள் கசிந்திருந்தால் காட்டுத்தீ போல் பரவியிருக்கும் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். நீட் வினாத்தாள் எப்படி தயாரிக்கப்படுகிறது. தயாரிக்கும் முறை குறித்து நீதிபதி சரமாரி கேள்வி கேட்டுள்ளார்.

“நீட் தேர்வு நடைமுறையின் அடிப்படை கட்டமைப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதா? இந்த முறைகேடுகள் தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளதா? தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களிடம் இருந்து, நேர்மையாக தேர்வெழுதியவர்களை பிரிக்க முடியுமா? என்பதை முதலில் ஆராய வேண்டும்.  குறிப்பிட்ட சில மையங்களில் மோசடிகள் நடந்திருக்கும் பட்சத்தில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிய முடியும் என்றால் பெரும் எண்ணிக்கையில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட இத்தேர்வுக்கு, மறு தேர்வு நடத்த உத்தரவிடுவது சரியாக இருக்காது.

“நீட் வினாத்தாள் கசிவு இல்லை என்பது தேசிய தேர்வு முகமையின் நிலைப்பாடு” வினாத்தாள் கசிவின் தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும். நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம். உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதில் அளிக்க ஒரு நாள் எடுத்துக் கொள்ளட்டும்.

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களை மட்டும் கண்டறிந்தால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தலாம். நீட் தேர்வு முறைகேடுகளை கண்டறிய சைபர் குற்ற தடவியல் தரவு ஆய்வை கொண்டு அறிய முடியாதா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி கேட்டுள்ளார்.

வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ, என்டிஏ ஜூலை 10ம் தேதிக்குள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நீட் முறைகேட்டை தடுக்க ஒழுங்கு நடைமுறைக்கு குழுக்களை ஒன்றிய அரசு அமைக்க பரிசீலிக்கலாம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் கண்டறியவிட்டால் மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது,

The post நீட் தேர்வு வினாத்தாள் கசித்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு: உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : SUPREME COURT ,NEET ,EU GOVERNMENT ,EU STATE ,Delhi ,Chief Justice ,D. Y. Chandrasuet ,Justices Bhardiwala ,Manoj Mishra ,Dinakaran ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...