×
Saravana Stores

வழக்கறிஞரை அதிகமுறை சந்திக்க அனுமதி கோரிய கெஜ்ரிவால் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: வழக்கறிஞரை அதிகமுறை சந்திக்க அனுமதி கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவுக்கு திகார் சிறை அதிகாரிகள், அமலாக்கத்துறையும் 5 நாட்களில் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காணொலி காட்சி மூலம் தமது வழக்கறிஞருடன் மேலும் 2 முறை பேசுவதற்கு அனுமதிக்க அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post வழக்கறிஞரை அதிகமுறை சந்திக்க அனுமதி கோரிய கெஜ்ரிவால் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Enforcement Department ,Kejriwal ,Delhi ,Tihar ,Chief Minister ,Arvind Kejriwal ,
× RELATED அமலாக்கத்துறை இரவு விசாரணைக்கு...