×
Saravana Stores

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

வேலூர், ஜூலை 8: நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து ரேஷன் கடைக்கு செல்லும் அத்தியாவசிய பொருட்களின் எடையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைக்கு கொண்டு செல்லும்போது, சரியான எடையில் உள்ளதா என கூட்டுறவு இணை, துணை பதிவாளர்கள் ஆய்வுசெய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் அனைத்து மண்டல இணைபதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் பெறப்படும் அத்தியாவசிய பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக தெரிவித்து ரேஷன் கடை பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை அளித்த வண்ணமும் உள்ளனர்.

இந்த பிரச்னை தொடர்பாக இணைபதிவாளர்கள் தங்களது மண்டலங்களில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் சுழற்சி முறையில் கூட்டுறவு பணியாளர்களை நியமித்து நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றும் போது எடையை சரி பார்க்க வேண்டும். இந்த உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இருப்பினும், எடை குறைவாக மூட்டைகள் வரப்பெறுவது குறித்தும் எடை குறைவாக மூட்டைகள் கிடங்குகளில் ஏற்றப்பட்டு ரேஷன் கடைகளில் இறக்கப்படுவது குறித்தும் தெளிவாக அறிய இயல்வில்லை. எனவே சுழற்சி முறையில் கிடங்குகளில் பணியில் உள்ள அலுவலர்களிடமிருந்து அறிக்கை பெற வேண்டும். தங்களது மண்டலங்களில் உள்ள கிடங்குகளில் இருந்து ஏற்றப்படும் அத்தியாவசிய பொருட்கள் சரியான எடையில் உள்ளதா என்பது குறித்து பொது வினியோக திட்ட துணை பதிவாளர், இணை பதிவாளர் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் அறிக்கையை உடனடியாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Registrar of ,-operative Societies ,Vellore ,Co-operative Societies ,Warehouse ,Dinakaran ,
× RELATED சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்க சுற்றறிக்கை