ரஜோரி: காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடந்துள்ள நிலையில், கடந்த 2 நாளில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் மஞ்சாகோட் பகுதியில் உள்ள கலுதி கிராமத்தில், ராணுவ வீரர்களின் முகாம்களின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு ராணுவ வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சுமார் அரைமணி நேரம் தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், பயங்கரவாதிகள் அருகிலுள்ள காட்டிற்குள் தப்பித்துச் சென்றுள்ளனர்.
முன்னதாக நேற்று தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் குல்காம் மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; இரண்டு வீரர்களும் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த பயங்கரவாதிகளின் அமைப்பு, தற்போது பாதுகாப்புப் படையினரையும் அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களில் குல்காம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டர்களில் 4 வீரர்கள் இறந்தனர். அமர்நாத் யாத்திரை நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தாக்குதல் நடந்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
The post நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம் appeared first on Dinakaran.