- யூரோ கோப்பை கால்பந்து
- ஸ்பெயின், பிரான்ஸ்
- ஜெர்மனி, போர்ச்சுகல்
- பெர்லின்
- போர்ச்சுகல்
- பிரான்ஸ்
- யூரோ கோப்பை
- பெர்லின், ஜெர்மனி
- கிறிஸ்டியானோ ரொனால்டோ
- போர்ச்சுகல்.…
- ஜெர்மனி,
- தின மலர்
பெர்லின்: ஜெர்மனியின் பெர்லின் நகரில் யுரோ கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி காலிறுதியில் போர்ச்சுகல்-பிரான்ஸ் அணிகள் மோதின.‘இதுதான் எனக்கு கடைசி யுரோ கோப்பை’ என நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ கூறியிருந்தார். அதனால் அவரது போர்ச்சுகல் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கூடவே முதல் ஆட்டத்தில் மூக்குடைந்தால் நட்சத்திர வீரர் கிளியன் எம்பாபே ஆட்டம் எடுபடுமா என்றும் பிரான்ஸ் ரசிகர்கள் சந்தேகத்தில் இருந்தனர்.
இந்த இரண்டுக்கும் பதிலளிக்கும் வகையில் ஆட்டமிருந்தது. ஆட்டத்தில் போர்ச்சுகல் ஆதிக்கம் செலுத்தினாலும், கோலடிக்கும் முயற்சியில் பிரான்ஸ் தான் முன்னிலையில் இருந்தது. எனினும் 2 அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறினர். முதல் 90 நிமிடங்களும் கோலின்றி சமனில் முடிய, கூடுதலாக 30 நிமிடங்கள் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் எந்த தரப்பும் கோலடிக்க முடியவில்லை. இப்படி 2 தரப்பிலும் 35 கோல் முயற்சிகள் வீணாகின. அதனால் முழு ஆட்டமும் 0-0 என கோலின்றி டிராவானது.
எனவே பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி, தோல்வி முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு அணிக்கும் வழங்கிய தலா 5 வாய்ப்புகளில் பிரான்ஸ் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. ரெனால்டோ உள்ளிட்ட போர்ச்சுகல் வீரர்கள் கண்ணீருடன் அரங்கில் இருந்து வெளியேறினர். முன்னதாக டுஸ்ஸல்டர்ப்பில் நடந்த ஸ்பெயின்-ஜெர்மனி இடையிலான 3வது காலிறுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவானது. அதனால் அளிக்கப்பட்ட 30நிமிடங்கள் கூடுதல் ேநரத்தில் மேலும் ஒரு கோலடித்த ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. போட்டியை நடத்தும் ஜெர்மனி காலிறுதியுடன் விடைபெற்றது. ஜூலை 9ம் தேதி நள்ளிரவு நடைபெறும் முதல் அரையிறுதியில் ஸ்பெயின்-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
The post யுரோ கோப்பை கால்பந்து; ஸ்பெயின், பிரான்ஸ்: வெளியேறியது ஜெர்மனி, போர்ச்சுகல் appeared first on Dinakaran.