×

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் படுதோல்வி அடைந்ததால் தேஜ கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமியின் மீதும் அவரது நிர்வாகத்தின் மீதும் மட்டுமின்றி மட்டுமின்றி பாஜ அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பாஜ மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள், தொடர்ந்து தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த 3ம்தேதி டெல்லி புறப்பட்டு சென்ற பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், அங்காளன் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள், மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினர்.

அப்போது முதல்வர் ரங்கசாமி கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதால் அவரது அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வது அல்லது வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பது பற்றியும் பரிசீலிக்குமாறு வற்புறுத்தினர்.
இதற்கிடையே முதல்வர் ரங்கசாமி பாஜ மீது அதிருப்தியில் இருப்பதால் மாற்று கட்சிகளிடம் தூது அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே டெல்லிக்கு சென்று வந்த காலாப்பட்டு தொகுதி பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளோம். இதே நிலை நீடித்தால் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியை சந்திக்க வேண்டி வரும். இதுகுறித்து எங்களது தலைவர் ஜேபி நட்டாஜியை டெல்லி சென்று பார்த்தோம். அவரிடம் புகார் கூறினோம்.

எனது காலாப்பட்டு தொகுதியில் ரங்கசாமி போட்டியிட்டாலும் நான் வெற்றிபெறுவேன். என்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு எனக்கு தேவையில்லை. நான் கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக நின்றுதான் வெற்றிபெற்றேன். என்னை எதிர்த்து சுயேச்சை வேட்பாளரைகூட போட்டார்கள். அதையும் தாண்டிதான் நான் வெற்றிபெற்றேன்.

மாநில தலைவர் செல்வகணபதியுடன் ஆலோசித்து அவரது ஒப்புதல் பெற்றுதான் டெல்லி சென்று புகார் அளித்தோம். கூட்டணி தர்மத்தை முதல்வர் ரங்கசாமி கடைபிடிக்கவில்லை. வருகிற 8ம்தேதி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து ரங்கசாமி மீது மீண்டும் புகார் தெரிவிப்போம் என்றார்.

The post என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : NR ,BAJA ,Puducherry ,NR Congress ,Minister ,Namachiwai ,Bajaj ,Teja alliance ,Rangasamy ,NR Kong. ,Bajaa ,MLA ,Kalyanasundaram Bharappu ,
× RELATED காற்றில் பறக்கும் முதல்வர், அமைச்சர்...