×

நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: ஒட்டுமொத்த நீட் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையே நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதனையடுத்து வெளியான நீட் தேர்வு முடிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும் எனவும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர். சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; ஒட்டுமொத்த நீட் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையே நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். பிரதமர், ஒன்றிய கல்வி அமைச்சரின் திறமையின்மை, பொறுப்பின்மை கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் அம்பலமாகி உள்ளது என ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டினார். நீட் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை 8-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : NEET ,Congress ,PM Modi ,Union Education Minister ,Delhi ,Secretary General ,Jairam Ramesh ,INDIA ,Dinakaran ,
× RELATED பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில்...