சென்னை: ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு நினைவு அஞ்சலிக்குள் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றனர். ஆகஸ்ட் மாதம்18 ஆம் தேதி ரவுடி ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகில் வைத்து படுகாலை செய்யப்பட்டார். ஆற்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆம்ஸ்ட்ராங் உதவியதாலேயே ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஆம்ஸ்ட்ராங் பெயர் சேர்க்கப்படாததால் இரு தரப்புக்கு இடையே முன் விரோதம் நீடித்தது. ஓராண்டு நினைவு அஞ்சலி வருவதற்குள் சபதம் எடுத்து ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றோம் என்று ஆற்காடு பாலு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளுக்கு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலு திட்டம் தீட்டி வந்தார். ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளிலேயே நினைத்தது நல்லபடியாக முடிந்ததாக ஆற்காடு பாலு வாக்குமூலம் அளித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
The post ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.