நாகப்பட்டினம்,ஜூலை6: கறவை மாடு கடன் பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ள கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3ம் தேதி பால்வளத்துறை, ஆவின், மாவட்ட நிர்வாகம், கூட்டுறவுத்துறை, மாவட்டம் முன்னோடி வங்கி இணைந்து கறவை மாடு கடன் விண்ணப்பங்கள் பெறும் முகாம் முதல் கட்டமாக 22 பகுதிகளில் 25 சங்கங்களுக்கு நடந்தது.
இதில் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து 2 ஆயிரத்து 109-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு கறவை மாடு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான விவரங்களை ஆவின் help line -8838586650 எண்ணை தொடர்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.
The post நாகப்பட்டினத்தில் கறவை மாடு கடன்பெற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது appeared first on Dinakaran.