×

பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தில் பத்திரப்பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் மற்றும் அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போஸ்ட்மேனாக பணியாற்றும் கரடிகுளம் சோழியன் தெருவை சேர்ந்தவர் சாக்ரடீஸ் (54). இவருக்கு, அவரது மகன் பெர்னாட்ஷா தனது பெயரில் உள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு திரௌபதி அம்மன் கோயில் பின்புறம் குமரன்நகரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அப்பொழுது பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் பிரகாஷ் ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் சாக்ரடீஸ் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி, சாக்ரடீஸ் லஞ்ச பணம் ரூ.1,500 பணத்துடன் நேற்று அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அலுவலக உதவியாளர் சிவசக்திவேலிடம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி ஹேமசித்ரா மற்றும் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் தலைமையில் போலீசார் பத்திரப்பதிவு அலுவலர் பிரகாஷ் மற்றும் அலுவலக தற்காலிக பணியாளர் சிவசக்திவேல் ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

The post பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Jayangkondam ,Socrates ,Karadikulam Sozhian Street ,Jayangkonda, Ariyalur district ,
× RELATED 543 மனுக்கள் பெறப்பட்டது அனுமதி இன்றி...