×

₹3.55 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

இடைப்பாடி, ஜூலை 6: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கொங்கணாபுரம் கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 100 மூட்டை கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் முதல் தர கொப்பரை கிலோ ₹80.25 முதல் ₹91.90 வரையும், இரண்டாம் தரம் கிலோ ₹52.75 முதல் ₹74.85 வரையிலும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக 100 மூட்டை கொப்பரை ₹3.55 லட்சத்துக்கு ஏலம் போனது. இன்று (6ம்தேதி) பருத்தி மற்றும் எள் ஏலம் நடைபெறும் என கூட்டுறவு சங்க அதிகாரி தெரிவித்தார்.

The post ₹3.55 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Ethappady ,Konkanapuram ,Tiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,Salem ,Namakkal ,Dharmapuri ,
× RELATED ₹35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை