×
Saravana Stores

இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டல் வருவாய் ஆய்வாளர் கைது

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாலா (30, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்நிலையில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சிலர் மாலா வேலைக்கு செல்லும்போது அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகவும், அவரிடம் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதேபோல் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் குருவையா, மாலாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாலா அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் போலீசார் வருவாய் ஆய்வாளர் குருவையா உட்பட 4 பேரை கைது செய்தனர்.

The post இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டல் வருவாய் ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Sankarankoil ,Mala ,Gandhinagar ,Sankarankoil, Tenkasi district ,
× RELATED சங்கரன்கோவில் அருகே கனமழையால் சேதமான...