×

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

புவனகிரி: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி பகுதி சாலையில் சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழக பெயரில் போலி சான்றிதழ்கள் அதிக அளவில் குவிந்து கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி போலி சான்றிதழ்கள் தயாரித்த சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த சங்கர் (39) மற்றும் சிதம்பரம் மீதிகுடி மெயின்ரோடு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த நாகப்பன் ஆகிய இருவரும் கைது செய்தனர்.யப்பட்டனர். இருவரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி பண்டல், பண்டலாக போலி சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர். பெயர் மற்றும் பாடப்பிரிவுகள் எழுதப்பட்ட 500க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், பெயர் எழுதப்படாத 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், போலி சீல்கள், லேப்டாப், பிரிண்டர், கம்ப்யூட்டர், போலி ஐடி கார்டுகள், செல்போன்கள், ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஆகியவற்றை கிள்ளை போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலி சான்றிதழ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Annamalai University ,CBCIT ,Bhubaneswar ,Chidambaram Anna University ,Kovilampoondi ,Chidambaram ,Cuddalore district ,Shankar ,Chidambaram Manmadsamy ,
× RELATED அண்ணாமலை பல்கலையில் துணைவேந்தரை...