×
Saravana Stores

அடுத்த மாதம் 11ம் தேதி நீட் முதுகலை தேர்வு

புதுடெல்லி: முதுகலை நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென 22ம் தேதி இரவு நீட் முதுகலை நுழைவு தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்தது. இதனை தொடர்ந்து மருத்துவ அறிவியல் தேர்வுகளுக்கான தேசிய தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நீட் முதுகலை நுழைவு தேர்வு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி இரண்டு ஷிப்ட்டுக்களாக நடத்தப்படும். தேர்வில் பங்கேற்கும் தகுதிக்கான கட்-ஆப் தேதி 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியாக தொடரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அடுத்த மாதம் 11ம் தேதி நீட் முதுகலை தேர்வு appeared first on Dinakaran.

Tags : NEET ,New Delhi ,Union Ministry of Health ,Dinakaran ,
× RELATED நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம்...