சென்னை: இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி பெங்களூரில் நடந்த ஒருநாள் தொடரையும், சென்னையில் நடந்த டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்து விட்டது. இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடர் சென்னையில் நடைபெற உள்ளது.
இன்று இரவு நடக்கும் முதல் ஆட்டத்தில் வெற்றிக் கணக்கை தொடரும் முனைப்பில் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. அதற்கேற்ப அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த சுபா, ஸ்னேகா, பிரியா, சைகா, மேக்னா, ராஜேஸ்வரி ஆகியோருக்கு பதிலாக புதிதாக தமிழக வீராங்கனை ஹேமா தயாளன், ராதா, ஸ்ரேயாங்கா, ஆஷா, அமன்ஜோத், சஜனா ஆகியோர் டி20 அணியில் இணைந்துள்ளனர்.
ஒருநாள், டெஸ்ட் தொடர்களை இழந்துள்ள லாரா தலைமையிலான தெ.ஆ பெண்கள் அணிக்கு வெற்றி கணக்கை தொடங்குவது முக்கியம். இருப்பினும் டெஸ்ட் அணியில் இருந்த டெல்மரிக்கு பதிலாக ஆல் ரவுண்டர் சோலே டிரியோன் மட்டும் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
The post இந்தியாவிடம் தொடர் தோல்வி வெற்றியை தொடங்குமா தெ.ஆ: இன்று சென்னையில் பெண்கள் டி20 appeared first on Dinakaran.