- கேரளா காங்கிரஸ்
- திருவனந்தபுரம்
- சுதாகரன்
- ஜனாதிபதி
- கேரள மாநில காங்கிரஸ்
- கண்ணூர் தொகுதி
- கண்ணூர் நடால்
- கண்ணூர்
- முதல் அமைச்சர்
- பினராயி…
- தின மலர்
திருவனந்தபுரம்: கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக கண்ணூர் தொகுதி எம்பியாக உள்ளார். இவரது சொந்த ஊர் கண்ணூர் நடால் ஆகும். தீப்பொறி பேச்சாளரான இவருக்கு கண்ணூரில் பெரும் செல்வாக்கு உண்டு. முதல்வர் பினராயி விஜயனை அடிக்கடி கடுமையாகத் தாக்கிப் பேசுவது இவரது வழக்கம். இந்நிலையில் சுதாகரன், எம்பியின் கண்ணூரிலுள்ள வீட்டிலிருந்து சில மந்திரத் தகடுகள் கைப்பற்றப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு மந்திரவாதி ஒருவர் அந்தத் தகடுகளை தோண்டி எடுக்கும் காட்சிகள் உள்ளன. மந்திரவாதியின் அருகே சுதாகரனும், காசர்கோடு தொகுதி காங்கிரஸ் எம்பியான ராஜ்மோகன் உண்ணித்தானும் உள்ளனர். அந்தத் தகடுகளில் ஏராளமான மந்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும் கால் மற்றும் உடல் உறுப்புகளும், வீட்டின் படங்களும் அதில் பொறிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு காலில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்று அந்த வீடியோவில் சுதாகரனிடம் மந்திரவாதி கேட்கிறார்.
அதற்கு ஆமாம் என்று கூறும் சுதாகரன், தன்னுடைய கால்களில் சில மாதங்களாக பிரச்னை இருக்கிறது என்று கூறுகிறார். உயிருக்கு ஆபத்து ஏற்படாதது என்னுடைய அதிர்ஷ்டம் என்றும் அவர் அப்போது கூறினார். சில பிரச்னைகள் ஏற்பட்ட போது ஒரு மந்திரவாதியை சுதாகரன் அழைத்து ஆலோசனை நடத்தியதாகவும், அப்போதுதான் அவரது ஆலோசனையின் படி வீட்டுக்கு அருகே தோண்டிப் பார்த்த போது மந்திரத் தகடுகள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நடந்தது என்று கூறப்படுகிறது.
The post கேரள காங்கிரஸ் தலைவரை மந்திரவாதம் மூலம் கொல்ல முயற்சி? வீட்டுக்கு அருகே தகடுகள் கைப்பற்றப்பட்ட வீடியோ வெளியானதால் பரபரப்பு appeared first on Dinakaran.