- குடுவாஞ்சேரி கிராமம்
- ஸ்ரீபெரும்புதூர்
- கடுவாஞ்சேரி கிராமம்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- ஜே.ஜே.நகர் 5வது தெரு
- குடவாஞ்சேரி
ஸ்ரீபெரும்புதூர்: கூடுவஞ்சேரி கிராமத்தில் கைக்கெட்டும் உயரத்தில் செல்லும் மின்சார வயரால், கிராம மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கடுவஞ்சேரி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஜே.ஜே.நகர் 5வது தெருவில் நான்கு மின்கம்பங்கள் மூலம், வீடுகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த, மின் கம்பங்களிலிருந்து செல்லும் மின் கம்பிகள் அருகிலுள்ள சீமை கருவேலை மரங்களில் சிக்கிக்கொண்டு, தரையில் இருந்து 6 அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால், எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, உயிர் பலி ஏற்படுவதற்கு முன்னரே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை, மின்வாரிய அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post கூடுவஞ்சேரி கிராமத்தில் கைக்கெட்டும் உயரத்தில் மின்சார வயர்கள்: கிராம மக்கள் அச்சம் appeared first on Dinakaran.