×

கோவையில் காணாமல் போன சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

கோவை: கோவை சரவணம்பட்டி அருகே முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள சிவனந்தபுரம் யமுனா நகரில் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த நகரில் உள்ள முட்புதரில் இருந்து கட்டப்பட்டிருந்த சாக்கில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே அந்த சாக்கை திறந்து பார்த்த போது அழுகிய நிலையில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்டிருந்த பெண் சடலம் ஒன்று இருப்பதை அறிந்து தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகில் இருக்கும் சரவணம்பட்டி காவல்துறையினருக்கும் தகவல் அளித்திருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் உடனே விசாரணையை துவக்கினர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களின் உதவியோடு பிரேதத்தை பரிசோதனை செய்தனர்.இதற்கிடையே முதற்கட்ட விசாரணையில் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் 15 வயது சிறுமி என்பதும் அவர் கடந்த 11ஆம் தேதி காணாமல் போனதாக ஏற்கனவே கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்ததையும் தற்போது காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து இந்த பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக 10ஆம் வகுப்பு பயின்று வந்த தனது மகளை காணவில்லை என தாய் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை தேடி வந்த நிலையில் தற்போது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் தங்கியிருந்த வீட்டின் அருகிலேயே இந்த முட்புதரில் இருந்து அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த சடலத்தின் அருகேயுள்ள பொருட்களை கைப்பற்றியும், அவர் வீட்டில் உள்ள பொருட்களை கைப்பற்றியும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அந்த அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அப்போது செல்லும் போது அவர் கைபேசியும் எடுத்து சென்றுள்ளார். அதனை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்….

The post கோவையில் காணாமல் போன சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Saravanampatti, Coimbatore ,Dinakaran ,
× RELATED மாநில அளவிலான சிலம்ப போட்டி: கோவை வீரர்கள் அசத்தல்