×
Saravana Stores

புதுச்சேரி அரசு மீது டெல்லியில் பாஜக எம்எல்ஏக்கள் புகார்: செய்தியாளர்கள் கேள்விக்கு புதுச்சேரி முதலமைச்சர் மழுப்பல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மீது பாஜக எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சி தலைமையகத்தில் புகார் கூறியிருப்பதாக வெளியான தகவல் பற்றி அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி மழுப்பலாக பதில் அளித்தார். புதுச்சேரியில் ஊழல் மற்றும் லஞ்சம் அதிகரித்து இருக்கிறது என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் தங்கள் கட்சி தலைமையகத்தில் புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சட்டமன்ற அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் நேரடியாக எந்த பதிலும் கூறாமல் மழுப்பினார். தொடர்ந்து மக்களுக்கான மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை புதுச்சேரி அரசு தொடர்ந்து எடுத்து வருவதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

The post புதுச்சேரி அரசு மீது டெல்லியில் பாஜக எம்எல்ஏக்கள் புகார்: செய்தியாளர்கள் கேள்விக்கு புதுச்சேரி முதலமைச்சர் மழுப்பல் appeared first on Dinakaran.

Tags : BJP MLAs ,Puducherry government ,Puducherry ,Chief Minister ,Rangasamy ,Delhi ,
× RELATED புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி..!!