- மராட்டியம்
- யு.
- தெஹ்ரான், தெலுங்கானா,
- மராத்தியம்
- மகாராஷ்டிரா
- உத்திரப்பிரதேசம்
- தெலுங்கானா
- குஜராத்
- சேனகன்
- தானே மாவட்டம்
- மும்பை, தெலங்கானா, குஜரா
மராட்டியம்: மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், தெலுங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.327 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் செனாகான் என்ற இடத்தில கடந்த மே 15ம் தேதி ரூ.2 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ மேபட்ரான் என்ற போதை பொருளை வைத்திருந்த இருவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உத்தரபிரதேசம், தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து மிக பெரிய நெட்ஒர்க் இயங்கி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தெலுங்கானாவில் நசரா போரில் உள்ள தொழிற்சாலையில் 103 கிராம் போதை பொருளும், 25 கோடி மதிப்புள்ள மூலப்பொருட்களும் சிக்கின.
இதே போன்று உத்தர பிரதேசத்தின் வாரணாசி, ஜான்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 71 கிராம் போதைப்பொருளை 300 கிலோ மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.327 கோடி மதிப்புள்ள என்.டி போதை பொருள் கடத்தல் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் தொடர்புடைய இன்னும் பலர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.