×
Saravana Stores

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

மும்பை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு உடனடி கடன் வழங்கும் வகையில் புதிய ஆன்லைன் கடன் திட்டத்தை பாரத் ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் MSME சஹஜ் என்ற பெயரில் புதிய ஆன்லைன் கடன் திட்டத்தை இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் குறு, சிறு உரிமையாளர்களால் ஜிஎஸ்டி விற்பனை ரசீதுகள் அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக கடன் பெறமுடியும்.

IT, ஜிஎஸ்டி Return மற்றும் வங்கி கணக்கு அறிக்கை போன்ற தகவல் ஆதாரங்களை பயன்படுத்தி கடன் தகுதி மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த ஆன்லைன் கடனுக்கான முழு விண்ணப்ப செயல்முறையை 15 நிமிடங்களுக்குள் நிறைவு செய்து விடலாம் என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. முற்றிலும் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கப்படுவதால் இதில் எந்தவிதமான மனித தலையீடும் இருக்காது என்றும், விரைவான மாற்று எளிமையான கடன் பெறும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு இது வழங்கும் என்றும் எஸ்பிஐ கூறியுள்ளது.

 

The post ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!! appeared first on Dinakaran.

Tags : SBI ,MUMBAI ,Bharat State Bank ,India ,Dinakaran ,
× RELATED ஹேக்கர்கள் பிடியில் கரூர் மின்வாரிய வாட்ஸ்அப் குழு..!!