×
Saravana Stores

தண்டவாளத்தை கடக்க முடியாமல் தடுமாறும் வாகன ஓட்டிகள்

மானாமதுரை, ஜூலை 4: மானாமதுரையில் நான்கு வழிச்சாலையின் கீழே உள்ள ரயில்வே கேட்ரோடு லெவல் கிராசிங் பகுதியில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.

மானாமதுரை அண்ணாசிலை பைபாஸ் பகுதியில் நான்கு வழிச்சாலையின் கீழே செல்லமுத்து நகரில் இருந்து புதுபஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் ரோட்டில் ரயில்ேவகேட் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் ரயில்வே துறையினரால் தண்டவாளங்கள் சீரமைப்பதற்காக தண்டவாளத்திற்கும் ரயில்வே லெவல் கிராசிங்கிற்கும் இடையே உள்ள ரோடு பெயர்த்து எடுக்கப்பட்டு பழைய தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டது.

இந்த லெவல் கிராசிங் கேட் வழியாக புதுபஸ் ஸ்டாண்ட், ஆனந்தவல்லி நகர், செந்தமிழ் நகர், ராசிநகர், ரயில்வே ஸ்டேஷன், ரயில்வே காலனி, பெமினா நகர், கேப்பர்பட்டினம், கிருஷ்ணராஜபுரம், காந்தி சிலை, தேவர் சிலை, தாயமங்கலம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்வோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தண்டவாளம் சீரமைப்பிற்காக தோண்டப்பட்ட ஜல்லிகற்கள் அப்படியே ேபாடப்பட்டுள்ளதால் நடந்து செல்லும் பார்வைக்குறைபாடுடைய முதியோர்கள், சிறுவர்கள், சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்களில் சிக்கி கீழே விழுகின்றனர். காயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்று ரயில்வே துறையினரை ெபாதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

The post தண்டவாளத்தை கடக்க முடியாமல் தடுமாறும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Manamadurai Annasilai Bypass ,Dinakaran ,
× RELATED தொடர்ந்து பெய்த மழையால் சேறும் சகதியாக மாறிய சாலை