புதுடெல்லி: கடந்த மே மாதம் நடந்த கியூட் தேர்வு முடிவுகள் ஜூன் 30ம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. இந்நிலையில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் நிலவி வருகின்றது. எப்போது தேர்வு முடிவுகள் வெளிவரும் என்பது குறித்து என்டிஏ இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கியூட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக தேசிய தேர்வு முகமையை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘என்டிஏ முதலில் ஜூன் 30ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்து இருந்தது. ஆனால் இப்போது வருகிற 10ம் தேதி கியூட் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தெரிகிறது. இது முற்றிலும் வெட்கக்கேடானது. இளங்கலை படிப்புக்காக ஏராளமான மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கு கியூட் தேர்வு ஒரு காரணமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல் appeared first on Dinakaran.