- நிதிஷ்
- பிரதி முதலமைச்சர்
- பீகார்
- அயோத்தி
- முதல் அமைச்சர்
- நிதீஷ் குமார்
- பாஜக
- ஆர்ஜேடி கட்சி
- நிதீஷ் குமார்
- சாம்ராட் சௌத்ரி
அயோத்தி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜ கூட்டணியில் இருந்து விலகினார். அதன் பின்னர்,ஆர்ஜேடி கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். நிதிஷ்குமாரின் இந்த முடிவு பாஜவுக்கு அதிர்ச்சி அளித்தது. அப்போது அமைச்சராக இருந்த சாம்ராட் சவுத்ரி நிதிஷ்குமாரை பதவியில் இருந்து நீக்கும் வரை தலைமுடியை வெட்ட மாட்டேன் என்று சபதம் எடுத்தார். சில மாதங்களுக்கு முன் பாஜவுடன் மீண்டும் கூட்டணி ஏற்படுத்தி நிதிஷ் முதல்வரானார். சாம்ராட் இப்போது துணை முதல்வராக உள்ளார். சாம்ராட் சவுத்ரி, ஒன்றரை வருடத்துக்கும் மேல் தலைமுடியை வெட்டாமல் இருந்தார்.
தலைப்பாகையுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று அயோத்திக்கு வந்த சாம்ராட் சவுத்ரி, ராமர் கோயிலில் மொட்டை போட்டு வழிபாடு நடத்தினார். அவருடன் பீகார் அமைச்சர்கள் பலர் வந்திருந்தனர். நிதிஷ்குமாருக்கு எதிராக சபதம் எடுத்திருந்தாலும் இப்போது அவர் இப்போது பாஜ கூட்டணிக்கு திரும்பி உள்ளார். சபதம் நிறைவேறியதால் மொட்டை போட்டு தலைப்பாகையை கழற்றியதாக தெரிவித்தார்.
The post நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர் appeared first on Dinakaran.