- Jawahirullah
- உத்தரப்
- பிரதேச சுகாதார துறை
- சென்னை
- உத்தரப் பிரதேச சுகாதாரத் துறை
- ஹத்ராஸ்
- மனிதநேய மக்கள் கட்சி
- உத்திரப்பிரதேசம்
சென்னை: ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் உத்தர பிரதேச சுகாதாரத்துறை ஏற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டது என ஜவாஹிருல்லா விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்டநெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 121 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கிப் படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மக்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.விபத்தில் சிக்கியவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்க உத்தர பிரதேச சுகாதார த்துறைஏற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டது என்றே தெரிகிறது. சுமார் 1.15 லட்சம் மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு உரியப் பாதுகாப்பு முயற்சிகளை மாநிலஅரசு செய்யத் தவறிவிட்டது என்பது கவலைக்குரியது. எதிர்காலத்தில் இது போன்றவிபத்துக்கள் எங்கும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு முயற்சிகளை மாநில அரசுகள்முன்னெடுக்க வேண்டும்.
The post ஜவாஹிருல்லா விமர்சனம் தகுந்த ஏற்பாடுகளை செய்ய தவறிவிட்டது உத்தர பிரதேச சுகாதாரத்துறை appeared first on Dinakaran.