துபாய்: ஐசிசி டி20 போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடத்திற்கு முன்னேறினார். 222 புள்ளிகளுடன் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் இலங்கை அணி வீரர் வணிந்து ஹசரங்கா ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.
ஹர்திக் பாண்டியா இரண்டு இடங்கள் முன்னேறி, இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவுடன் முதல் பகிர்ந்து கொண்டார். டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரானபோட்டியில் ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய பாண்டியா, பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐசிசி டி20 போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார்.
டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்களுக்கு மேல் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டில் 144 ரன்கள் எடுத்துள்ளார். அபாரமாக பந்துவீச்சை 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் மார்கஸ் ஸ்டோனிஸ், சிக்கந்தர் ராசா, ஷாகிப் அல் ஹசன் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் ஒரு இடம் முன்னேறியுள்ளனர். முகமது நபி நான்கு இடங்கள் பின்தங்கி முதல் ஐந்து இடங்களிலிருந்து வெளியேறினார்.
The post ஐசிசி டி20 போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா appeared first on Dinakaran.