×
Saravana Stores

புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்

டெல்லி: நாடு முழுவதும் அமலாகியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் மூன்று நீதிமன்றங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் தலைமை நீதிபதி கலந்து கொண்டார்.

அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய சந்திரசூட், “பிற கட்டடங்களை போன்று செங்கல் மற்றும் கான்கிரீட்டால் ஆனது நீதிமன்ற கட்டடம் அல்ல. இவை நம்பிக்கையால் உருவாக்கப்படுபவை. நீதிமன்றங்கள் நீதியின் நற்பண்புகளையும், சட்டத்தின் ஆட்சியையும் உணர்த்துகின்றன.” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது என அவர் விளக்கம் அளித்தார். தடயவியல், புலனாய்வு அதிகாரிகளின் திறன், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டால் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்கள் நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் என கடந்த மார்ச் மாதம் CJI சந்திரசூட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice ,Chandrasuet ,Delhi ,
× RELATED உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை...