மும்பை: டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு, ‘நவம்பரில் ஃபோன் கால்’ செய்த ரோஹித் சர்மாவுக்கு நன்றி என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்தியா அணி வரலாற்று சிறப்பிமிக்க டி20 உலகக் கோப்பையை வென்று, இந்திய ரசிகர்களின் 17 ஆண்டுகால காத்திருப்பை பூர்த்தி செய்து அசத்தியது.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு பயிற்சியாளர் டிராவிட் உறுதுணையாக விளங்கினார். மேலும் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜடேஜா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் இது கடைசி போட்டியாகவும் அமைந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனால் இந்தியாவின் நீண்ட நாள் கனவு தூள் தூள் ஆனது. ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய இருந்தது. மேலும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பதில் தனது விருப்பமின்மையை டிராவிட் வெளிப்படுத்தினார்.
View this post on Instagram
இதையடுத்து புதிய பயிற்சியாளரை நியமிக்க கேப்டன் ரோஹித் சர்மாவும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் தயக்கம் காட்டினர். ராகுல் டிராவிட்டை டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை கையாளும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து ராகுல் டிராவிட்டும், ரோஹித் மற்றும் ஜெய் ஷாவின் விருப்பதை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த ஜூன் 02ம் தேதி முதல் தொடங்கியது. டி20 உலகக் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியது. இதய அணியின் முதல் ஆட்டம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா என அனைத்து அணிகளையும் அபாரமாக வென்று இந்திய ரசிகர்களின் 17 ஆண்டுகால காத்திருப்பை பூர்த்தி செய்து உலகக் கோப்பையை தட்டி தூக்கியது. இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதையடுத்து நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது.
விராட் கோலி, ரோஹித் சர்மா, பாண்டியா போன்ற வீரர்கள் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் தங்கள் உணர்ச்சிகளை கண்ணீரின் மூலம் வெளிப்படுத்தினர். இதனை கண்டு ரசிகர்களும் உணர்ச்சிவசப்பட்டனர். விராட் கோலி டிராவிட் கையில் கோப்பையை வழங்கிய தருணத்தில் டிராவிட்உணர்ச்சிகளை மறைக்க முடியவில்லை.
எப்போதும் அமைதியாக இருக்கும் டிராவிட் டி20 உலகக் கோப்பை கோப்பையை வென்ற பிறகு வெற்றியை ஒரு சிறு குழந்தையைப் போல கொண்டாடி தீர்த்தார். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்ற பிறகு, ரோஹித் சர்மாவுக்கு டிராவிட் நன்றி தெரிவித்தார். இதுகுறித்து மேலும் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில்;
“நவம்பரில் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி, ரோஹித் என்றார், ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இந்த தருணம் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி என டிராவிட் தெரிவித்ததார்.
எந்த வகையான நபராக இருந்தாலும் அதைப் பிரதிபலிக்க கடினமாக இருக்கும். அந்த நிமிடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை டிராவிட் தன்னுடன் நீண்ட நேரம் வைத்திருப்பார். கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு. மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அந்த 30 வினாடி கிளிப் தன் நினைவில் நீங்க இருக்கும் என டிராவிட் கூறினார். இந்திய அணிக்கு டிராவிட்டின் பங்களிப்புகள் அளப்பரியது.
மக்களின் எதிர்பார்ப்புகள், அழுத்தம், ஆகியவை வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் பெருஞ்சுவராக டிராவிட் நின்று காத்தார். விராட் கோலியும் இதே விஷயத்தைத்தான் ஒரு முறை தெரிவித்தார், ‘உங்கள் காலத்தில் நீங்கள் விளையாடிய விதம் மற்றும் கிரிக்கெட்டைப் பார்த்து, அதில் இருந்து வெளியே வந்து டி20 வடிவத்திற்கு தேவையான சுதந்திரத்தை வீரர்களுக்கு கொடுத்தார்.
இது சரி என்று ஒரு பேட்ஸ்மேன் உணர்ந்தால், டிராவிட் மறுப்பேதும் சொல்லாமல் அவர்களை அவர்கள் போக்கில் விளையாட சொன்னார். நீங்கள் அந்த முடிவை எடுங்கள் என்று டிராவிட் கூறினார். டிராவிட் தனது அனுபவத்தை ஒருபோதும் யாரிடமும் திணித்ததில்லை. டிராவிட் மற்றவர்களைப் புரிந்துகொண்டு மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி யோசித்தார்.
ஒரு போட்டியில் வென்ற பிறகு நாம் மறந்துவிடும் சிறிய விஷயங்கள் இவை. அவரது பங்களிப்பு மகத்தானது. அவரது நகைச்சுவை உணர்வு அருமை” என சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். டி20 உலகக் கோப்பையின் வெற்றி விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா மற்றும் டிராவிட் ஆகியோருக்கு கடைசி போட்டியாக அமைந்தது.
The post நவம்பரில் என்னை அழைத்ததற்கு நன்றி ரோஹித் : ராகுல் டிராவிட் appeared first on Dinakaran.