தொண்டி, ஜூலை 2: தொண்டி அருகே நம்புதாளையில் பல்லாக்கு ஒலியுல்லா தெருவிற்கு செல்லும் வழியில் ஆற்றோடை பகுதி உள்ளது. இதில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கல் பாலம் போடப்பட்டது. காலனி மற்றும் பல்லக்கு ஒலியுல்லா தெருவிற்கு செல்லும் மக்கள் இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்வார்கள். போதிய பராமரிப்பு இல்லாததால் பாலம் சேதமடைந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து நேற்று யூனியன் பொது நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் ஆற்றில் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பாண்டிச் செல்வி ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் சுமதி முத்துராக்கு, செல்வகுமார், ஊராட்சி துணை தலைவர் சுமையா பானு இபுராகிம், கிழக்கு தெரு ஜமாத் தலைவர் சேவுதாவுது மற்றும் அனைத்து தெரு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
The post ஆற்றில் பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.