×
Saravana Stores

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைகால் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

தஞ்சாவூர் ஜூலை 2: தஞ்சாவூர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ம் ஆண்டு நேரடி சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூர், திருவையாறு மற்றும் ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 1.07.2024 முதல் 15.07.2024 வரை நேரடிச்சேர்க்கை மூலமாக பயிற்சியாளர்கள் சேர்க்கப்படவுள்ளனர். உடனடி வேலைவாய்ப்பு பெறக்கூடிய தொழிற்பிரிவுகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன.

இந்நிலையத்தில் தஞ்சாவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2020-21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்கவேண்டும். மேலும் 8ம் வகுப்பு கல்வித்தகுதிக்குரிய தொழிற்பிரிவுகளுக்கு 8 அல்லது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் 8ம் வகுப்பு கல்வித்தகுதிக்குரிய தொழிற்பிரிவுகளுக்கு 8ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ். சாதிச் சான்றிதழ் புகைப்படம், ஆதார் கார்டு போன்ற அசல் ஆவணங்களுடன் நேரடியாக வந்து விண்ணப்பங்களை பூர்த்திசெய்து இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

2020-21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து அதே நாளில் சேர்க்கை ஆணை வழங்கப்படும்.
இந்நிலையத்தில் பயிற்சியில் சேருபவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச சீருடை, சைக்கிள், பாட புத்தகம், மாத உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். பயிற்சி முடித்தபின் வளாகத் நேர்காணல் மூலம் தொழிற்பழகுநர் பயிற்சி மற்றும் வேலை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொண்டு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநா, முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சாவூர் அல்லது அருகிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது 9994043023, 9965342967, 9840950504, 9442220049 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

The post குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைகால் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Thanjavur Govt Vocational Training Center ,Kuradithir ,Thanjavur ,District Collector ,Deepak Jacob ,Tiruvaiyaru ,Thanjavur district ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம்...