×
Saravana Stores

பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக முன்னாள் நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். 2024 ஐபிஎல் சீசனுடன் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் (39 வயது) அறிவித்திருந்த நிலையில், அவருக்கு ஆர்சிபி அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தனது கடைசி சீசனில் அவர் 13 இன்னிங்சில் 326 ரன் (ஸ்டிரைக் ரேட் 187.35) விளாசியது குறிப்பிடத்தக்கது. 2008ல் இருந்து நடந்த அனைத்து ஐபிஎல் தொடரிலும் விளையாடிய 7 வீரர்களில் ஒருவர் என்ற பெருமைக்குரிய டிகே… டெல்லி, பஞ்சாப், மும்பை, குஜராத், கொல்கத்தா, பெங்களூரு என 6 அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

The post பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் appeared first on Dinakaran.

Tags : Dinesh Karthik ,Royal Challengers Bangalore ,IPL ,2024 IPL ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரிலும் ரத்து செய்ய ரோகித்,...