×

தீபிகாவுக்கு தடபுடல் விருந்தளித்த பிரபாஸ்

ஐதராபாத்: நடிகை தீபிகா படுகோனுக்கு ஆந்திர சமையலின் தடபுடல் விருந்து கொடுத்து அசத்தினார், பிரபாஸ். அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாகிறது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக தீபிகா படுகோன் ஐதராபாத் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆந்திராவின் சிறப்பு உணவுகளை வழங்கி உபசரிக்கும் விதமாக தடபுடல் விருந்துக்கு பிரபாஸ் ஏற்பாடு செய்தார். அதன்படி, படப்பிடிப்பு தளத்தில் பலவகையான உணவு வகைகள் பிரபாஸ் வீட்டில் இருந்து வந்தது. இதுபற்றி தீபிகா சமூக வலைத்தளத்தில் கூறும்போது, ‘உங்களுக்கு தெரிந்தால், உங்களுக்கு தெரியும்’ என்ற கேப்ஷனுடன் அந்த உணவுத் தட்டுகளை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு சாஹோ படப்பிடிப்பில் இதுபோல் ஸ்ரத்தா கபூருக்கும், சலார் படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசனுக்கும் பிரபாஸ் விருந்து வழங்கி சிறப்பித்துள்ளார்….

The post தீபிகாவுக்கு தடபுடல் விருந்தளித்த பிரபாஸ் appeared first on Dinakaran.

Tags : Prabas ,Deepika ,Hyderabad ,Deepika Padukone ,AP ,Amitabh Bachchan ,Dipika ,
× RELATED கல்கி 2898 ஏடி ஜூன் 27ல் ரிலீஸ்