- இந்தியா
- இந்தியா-தென்னாப்பிரிக்கா
- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்
- பார்படோஸ்
- T20 உலக கோப்பை
- 9வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்
- பிரிட்ஜ்டவுன் ஸ்டேடியம்
- தின மலர்
பார்படாஸ்: 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் நம்பர் 1 அணியான இந்தியா, தென்ஆப்ரிக்கா மோதுகின்றன.
இந்தியா 2007ம் ஆண்டு முதல் டி.20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், 2014ல் பைனலில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது. தற்போது 3வது முறையாக பைனலில் களம் இறங்கும் நிலையில் 3வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. நடப்பு தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இந்தியா பைனலுக்குள் வந்துள்ளது.
பேட்டிங்கில் ரோகித்சர்மா (248 ரன்) அதிரடியாக தொடக்கம் அளித்து வருகிறார். சூர்யகுமார் 196, ரிஷப் பன்ட் 171 ரன் எடுத்துள்ளனர். கோஹ்லி 7 போட்டியில் 75 ரன் மட்டுமே அடித்துள்ளார். முக்கியமான போட்டியில் இன்று அவர் சிறப்பாக ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஷிவம் துபே, ஜடேஜா பெரிதாக ஆடவில்லை. ஹர்திக் பாண்டியா 139 ரன் அடித்துள்ளதுடன், 8 விக்கெட்டும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறார். பவுலிங்கில் பும்ரா மிரட்டி வருகிறார்.
இந்த தொடரில் 25.4 ஓவர் வீசி 154 ரன்னே கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அர்ஷ்தீப் சிங் 15 விக்கெட் எடுத்து 2வது இடத்தில் இருக்கிறார். சுழலில் குல்தீப் யாதவ்(10), அக்சர் பட்டேல் (8விக்கெட்) வீழ்த்தி இருக்கின்றனர். வெற்றிபார்மில் இருப்பதால் அணியில் இன்று எந்த மாற்றமும் இருக்காது. மறுபுறம் தென்ஆப்ரிக்கா அணியும் சூப்பர் பார்மில் உள்ளது. 8 போட்டியில் தொடர்ச்சியாக வென்று பைனலுக்கு வந்துள்ளது. பேட்டிங்கில் டிகாக் 204, டேவிட் மில்லர் 148, கிளாசென் 138, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 134 ரன் எடுத்துள்ளனர். பேட்டிங்கைவிட பவுலிங் தான் பலமாக உள்ளது.
அன்ரிச் நார்ட்ஜே 13, ரபாடா 12 வேகத்தில் அசத்துகின்றனர். சுழலில் தப்ரைஸ் ஷம்சி (11), மகாராஜ் (9 விக்கெட்) இந்திய அணிக்கு நெருக்கடி அளிப்பர். முதன் முறையாக ஐசிசி தொடரில் பைனலுக்குள் வந்துள்ள தென்ஆப்ரிக்கா கோப்பையை கைப்பற்ற கடுமையாக போராடும்.
The post ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-தென்ஆப்ரிக்கா பைனலில் இந்தியா பேட்டிங் தேர்வு appeared first on Dinakaran.