டெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சங்கள், அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலகத்தின் பல பணிகளை மேற்கொள்ளக்கூடிய மல்டிடாஸ்கிங் ஊழியர்கள் மற்றும் ஹவால்தார் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த பணிகளில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் விண்ணப்பக் கட்டணத்தைச் சமரப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 1 என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கு ஆகஸ்ட் 10 மற்றும் ஆகிய 11 தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும் மற்றும் விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேரசசி பெற்றிருக்கவேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்தப்பட உள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு (வல்தார் பதவிகளுக்கு மட்டும்) என இரண்டு நிலைகளில் தேரவு நடைபெறும். இதைத்தொடரத்து ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பாணை பணியாளர் தேர்வை மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவு தேதிகள், விண்ணப்பிககும் முறை. தேர்வு தேதி, தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அதில் தெரிந்துகொள்ளலாம்.
The post மத்திய அரசின் பல்வேறு துறை காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு appeared first on Dinakaran.