புதுடெல்லி: நீட் முறைகேட்டை தொடர்ந்து போட்டித் தேர்வுகளை சீர்திருத்தவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. இந்நிலையில் இந்த குழு பொதுமக்கள் குறிப்பாக பெற்றோர்,மாணவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளனர்.
இதுகுறித்து கல்வி அமைச்சக அதிகாரி கூறுகையில்,‘போட்டி தேர்வுகளில் மாற்றம் கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட குழு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளை வரவேற்கிறது. தங்கள் கருத்துக்களை mygov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஜூலை 7 ஆகும்’’ என்றார்.
The post நீட் முறைகேடு: கருத்து கேட்கிறது உயர்மட்ட குழு appeared first on Dinakaran.