×
Saravana Stores

ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா பதுக்கி விறற்பனையில் ஈடுபட்ட 2 பேரை, போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளில் அசாம், ஒடிசா, மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள், ஒரகடம் பகுதியில் தங்கி வேலை செய்கின்றனர்.

தற்போது, ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஒரகடம் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார், ஒரகடம் அடுத்த வைப்பூர் கிராமத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள அறையினை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதனையடுத்து, கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த சதாம் உசேன் (29), அக்தர் அலி (21). ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1.10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sriprahumudur ,Orakadam ,Assam ,Odisha ,Manipur ,Dinakaran ,
× RELATED வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது: போலீசார் விசாரணை